அதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் – முழு விவரம்
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்த தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றிய முழு தகவலை இங்கே பார்க்கலாம்.இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சல்மான் கான் இந்த ஆண்டில் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவர் 228.09 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். 2.0 படத்தில் நடித்துள்ள இந்தி நடிகர் அக்ஷய் குமார் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் 185 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இந்தப் பட்டியலில் பிரபல நடிகை தீபிகா படுகோன் 4 ஆம் இடம் பிடித்துள்ளார். இவர் ரூ.112.8 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். கடந்த ஆண்டு 7-ஆம் இடம் வகித்து வந்த பிரியங்கா சோப்ரா, இந்த ஆண்டு 49-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (ரூ.66.75 கோடியுடன்) 11-வது இடத்தை பிடித்துள்ளார். ரஜினிகாந்த் (ரூ.50 கோடி) 14-வது இடத்தையும், விஜய் (ரூ.30.33 கோடி) 26-வது இடத்திலும், விக்ரம் (ரூ.26 கோடி) 29-வது இடத்திலும் உள்ளனர். சூர்யா (ரூ.23.67 கோடி), விஜய் சேதுபதி (ரூ.23.67 கோடி) இருவரும் 34-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தனுஷ் (ரூ.17.65 கோடி) 53-வது இடத்திலும், டாப்சி (ரூ.15.48 கோடி) 67-வது இடத்திலும், நயன்தாரா (ரூ.15.17 கோடி) 69-வது இடத்திலும், கமல்ஹாசன் (ரூ.14.2 கோடி) 71-வது இடத்தையும் பிடித்துள்ளனர். (15)




