செய்திகள்

அதிக விடுமுறை நாட்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கை!

உலகில் அரச விடுமுறைகள் அதிகம் வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.

190 நாடுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இலங்கை 4 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் இடத்தை மியன்மார் பெற்றுள்ளதுடன், அந்தநாட்டில் நடப்பாண்டில் மாத்திரம் 32 அரச விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் நேபாளம் இரண்டாம் இடத்திலும், ஈரான்3ஆம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கை இந்த பட்டியலில் 4ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தவருடத்தில் இதுவரை 25 அரச விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

-(3)