செய்திகள்

”அது ஐ.தே.கவின் கடைசி காலமாகதான் இருக்கும்”

ஜனாதிபதித் தேர்தல் ஒத்தி வைக்கப்படுமாக இருந்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதிக் காலமாகவே இருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பதுளை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களால் தேர்தலை ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டு வருவதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மகிந்த ராஜபக்‌ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது மகிந்த ராஜபக்‌ஷ மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்புக்கமைய தேர்தலை நடத்தாது இருக்க முடியாது. அவ்வாறு தேர்தல் ஒத்திவைத்து முட்டாள்தனமான வேலையை செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. அப்படி செய்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதிக்காலமாகவே இருக்கும் என்றார்.

-(3)