”அந்த பாடல் நாங்கள் தயாரித்தது அல்ல” – மறுக்கும் தேசிய மக்கள் சக்தி!
தமிழ் தேசிய வாதம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக தொடர்புடைய தமிழ் மொழி பிரசாரப் பாடல்களை வடக்கு மற்றும் கிழக்கில் வெளியிட்டுள்ளதை தேசிய மக்கள் சக்தி மறுத்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சில இளைஞர்களால் உருவாக்கப்பட்ட சில காணொளிகள், தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் பேஸ்புக்கில் டேக் செய்யப்பட்டுள்ளதாக, தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க கூறியுள்ளார்.
இந்த நிலையில், தேசிய மக்கள் சக்திக்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு அந்த காணொளிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.




