அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தினம் முன்னெடுப்பு
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் நாடு பூராகவும் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.குறித்த தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்த உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை “முறையான விழிப்புணர்வுடன் விழிப்பாக இருப்பதன் மூலம் அனர்த்த அபாயத்தை குறைத்துக்கொள்வோம்” எனும் தொனிப் பொருளின் கீழ் யாழ்.மாவட்ட செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தினம் முன்னெடுக்கப்பட்டது.(15)




