அனுரகுமார திஸாநாயக்கவுடன் நோர்வே தூதுவர் சந்திப்பு!
இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் ஹரினி அமரசூரிய ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் குறித்தும் இரு தரப்புகளும் ஆலோசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




