அனுஷ்காவுக்கு வந்த சோதனை !
தமிழ் தெலுங்கு என்ற இரண்டு மொழிகளும் ஒரு கட்டத்தில் மிகவும் பிஸியாக இருந்த நடிகை அனுஷ்கா. ஆனால் இவருக்கு தற்போது படவாய்ப்புகள் அதிகளவில் குறைந்துள்ளன.
தற்போது பாகுபலி 2 படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. அதையடுத்து பாக்மதி என்ற தெலுங்கு படத்தில் மட்டுமே அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். புதிய பட வாய்ப்புகள் அவரை தேடி வருவது இல்லை. இதையடுத்து அவர் தனது சம்பளத்தை வெகுவாக குறைத்துள்ளாராம்.
மேலும் அனுஷ்கா சம்பாதித்த பணத்தை வைத்து சென்னை மற்றும் ஹைதராபாத்தில் ஹோட்டல்கள் துவங்க திட்டமிட்டுள்ளாராம். 35 வயதை தாண்டிய அனுஷ்காவுக்கு அவர் வீட்டில் தீவிரமாக மாப்பிளை தேடி வருகின்றனர்.
N5




