செய்திகள்

அனுஷ்காவை திருமணம் செய்ய மாட்டேன் பிரபாஸ் திடீர் அறிவிப்பு

பாகுபலி படம் வருவதற்கு முன்பிருந்தே பிரபாஸ், அனுஷ்கா பற்றிய காதல் கிசுகிசு தெலுங்கு மற்றும் தமிழ்ப் படவுலகில் காட்டுத்தீயாகப் பரவியது. ஆனால், அவர்கள் இருவரும் இதை மறுத்து வந்தனர். தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று தெரிவித்தனர். என்றாலும், கிசுகிசுக்கள் வருவது நிற்கவில்லை. தங்களைப் பற்றிய தகவல்கள் தீவிரமாகப் பரவிய நிலையிலும், அவர்கள் தங்கள் நட்பை விட்டுக்கொடுப்பதாக இல்லை. அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு பிரபாஸும், பிரபாஸின் பிறந்தநாளுக்கு அனுஷ்காவும் வாழ்த்து தெரிவித்து வந்ததுடன், சில அன்புப் பரிசுகளும் பரிமாறிக்கொண்டனர். இது அவர்களின் மறைமுக காதல் கிசுகிசுக்களுக்கு பலமான அஸ்திவாரம் போட்டது.
பாகுபலி 2 ரிலீசுக்குப் பிறகு தன்னையும், அனுஷ்காவையும் இணைத்து கேட்கப்படும் கேள்விகளைத் தவிர்த்து வருகிறார், பிரபாஸ். இதனால், அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெலுங்குப் படவுலகில் தகவல் பரவியது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் வெளிநாட்டு ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டி அளித்த பிரபாஸ், ‘அனுஷ்காவுடன் காதலா? எப்போது திருமணம்?’ என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தார்.ஒரு நிமிடம் அமைதி யாக இருந்த அவர், பிறகு சுதாரித்துக் கொண்டு, ‘நானும், அனுஷ்காவும் நண்பர்கள் மட்டுமே. எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை. அனுஷ்காவை நான் திருமணம் செய்ய மாட்டேன்’ என்று தடாலடியாகப் பதிலளித்தார். பிரபாஸின் இந்த அறிவிப்புக்கு அனுஷ்காவின் தரப்பில் என்ன பதில் சொல்லப் படும் என்று இதுவரை தெரியவில்லை.(15)1factstoknowaboutbahubaliswifeanushka-31-1490954961 09-1494326534-untitled-11-17-1508261015