அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி வளர்ந்து வரும் நடிகர்களில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிவிட்டார். இவர் படம் வந்தால் நம்பி போகலாம் என்ற நிலை உருவாகிவிட்டது.
இந்நிலையில் இவர் நடிப்பில் தமிழில் சூப்பர் ஹிட் ஆன பிச்சைக்காரன் படம் தெலுங்கில் டப் செய்து ரிலிஸ் செய்தனர். இந்த படம் தமிழை விட தெலுங்கில் மெகா ஹிட் அடித்துள்ளது.
கிட்டத்தட்ட தற்போது வரை ரூ 25 கோடி வரை வசூல் செய்துவிட்டது, இதன் மூலம் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை விட பிச்சைக்காரன் அதிக வசூல் தந்துள்ளதாம்.
இனி இந்த வசூல் சாதனையை கபாலி முறியடித்தால் தான் உண்டு என டோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் தெரிவித்துள்ளது.
N5




