செய்திகள்
அன்று இலங்கைக்கு எதிராக செயற்பட்டவர்கள் இன்று நெருக்கமாக பழகுகின்றனர் : இதுவே மாற்றத்தின் ஆரம்பம் என்கிறார் மஹிந்த சமரசிங்க
அன்று இலங்கைக்கு எதிராக செயற்பட்டவர்கள் இன்று இலங்கையுடன் நற்புடன் செயற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் இதுவே மாற்றத்திற்கான ஆரம்பம் எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் மற்றும் ஆஸ்திரியா விஜயம் தொடர்பாக இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஜேர்மன் மற்றும் ஆஸ்திரியாவுக்கான விஜயம் வெற்றிகரமானதாக அமைந்துள்ளது. அன்று இலங்கைக்கு எதிராக செயற்பட்டவர்கள் தற்போது இலங்கை ஜனாதிபதிக்கு சிறந்த வரவேற்பை வழங்கியுள்ளனர். இது எமக்கு கிடைத்த வெற்றியே என அவர் தெரிவித்துள்ளார்.
n10




