செய்திகள்

அபிவிருத்திக்காக புதிய சட்டத்தை கொண்டு வருவோம் : பிரதமர்

நாட்டை அபிவிருத்திச் செய்வதற்காக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற இளம் தொழில் முயற்சியாளர்கள் சபையின் நிறைவாண்டு வைபவத்திலேயே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் கடன் பெற்றுக் கொண்ட முறை காரணமாக அதனை மீளச் செலுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது வருடத்திற்கு 500 கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நேரடி வெளிநாட்டு முதலீடு கட்டாயம் தேவைப்படுகின்றது. 2020ம் ஆண்டில் அந்த இலக்கை அடையக்கூடிய வல்லமை சமகாவ அரசாங்கத்திற்கு உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார். -(3)