செய்திகள்

அபிவிருத்தி திட்டங்களை குழப்பினால் அது மக்களுக்கு செய்யும் துரோகமே : பிரதமர்

மக்களுக்காகவே பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தை அமைத்துள்ளது. இதனால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளை யாரேனும் குழப்ப நினைத்தால் அது மக்களுக்கு செய்யும் துரோகமே என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற மொரஹாதென்ன களுகங்கை நீர்த்தேக்கத்திற்கான புனித பொருட்களை பிரதிஸ்டை செய்யும் நிகழ்விலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாம் மக்களின் அபிவிருத்திக்காகவே இணைந்து  அரசாங்கத்தை அமைத்துள்ளோம். எம்மால் நாட்டில் பல்வேறு  அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதனை யாரும் குழப்ப நினைத்தால் அது அவர்கள் மக்களுக்கு செய்யும் துரோகமே. என அவர் தெரிவித்துள்ளார்.
R-06