அமெரிக்காவின் டலாசில் போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள்
அமெரிக்காவின் டலாசில் பொலிஸாருக்கு எதிராக நேற்று இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலீசார் மீது நடத்தப்பட்ட சினைப்பர் தாக்குதலில் 5 பேர் பலியாகி 6 பேர் காயம் அடைந்துள்ளனர். 2011 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் அமெரிக்க மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் அமெரிக்காவின் சட்டஅமுலாக்கல் பிரிவுக்கு ஏற்பட்ட மோசமான நாள் இது என்று வர்ணிக்கப்படுகிறது.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் போலீசாருடன் நடைபெற்ற கடும் சண்டையின்போது கொல்லப்பட்டுள்ளார். இவர் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தினால் கொல்லப்பட்டாரா அல்லது தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
https://www.youtube.com/watch?v=LVoF1JUzb8M
இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்று எந்த விபரத்தையும் போலீசார் தெரிவிக்கவில்லை. ஆனால் மிகவும் திட்டமிடப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி :
அமெரிக்காவில் போலீஸ் எதிர்ப்பு போராட்டத்தில் 4 அதிகாரிகள் சுட்டுக் கொலை




