அமெரிக்காவின் பாரிய போர்க் கப்பல் ‘USS பிராங் கேபிள்’ இன்று கொழும்பு வருகின்றது
USS Frank Cable ‘பிராங்க் கேபிள்’ என்ற அமெரிக்காவின் பாரிய கப்பல் இன்று திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளது. இந்தக் கப்பலானது வழக்கமான பணியில் எரிபொருளை வழங்குவதற்காகவும் துறைமுகத்தைப் பார்வையிடுவதற்காகவும் இங்கு வரவிருப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இவ்விஜயத்தின் போது, கப்பல் மாலுமிகள் மற்றும் தங்கியிருக்கும் தொண்டர் பணியாளர்கள் அனைவரும் கரையோர விடுமுறை ஒன்றை அனுபவிப்பார்கள். பிராங்க் கேபிள் இந்து ஆசிய பசுபிக் சமுத்திர வலயத்தில் மீட்பு உதவி மற்றும் மீட்புப் பணிகளை வழங்குவதற்காகவும் ஐக்கிய அமெரிக்காவின் இராணுவ வீரர்களுக்கு ஆதரவு வழங்குவதற்காகவும் குவாம் என்ற இடத்தில் நிலைகொண்டுள்ள ஒரு நீர்மூழ்கிக் கப்பல் ஆகும்.
இது 500 சிப்பந்திகள் குழுவை உள்ளடக்கியிருப்பதுடன், ஐக்கிய அமெரிக்காவின் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் மேற்பரப்புத் தளத்திற்கும் பராமரிப்பையும் ஆதரவையும் பாதுகாப்பையும் நல்குவதற்கான செயற்பாட்டுத் திட்டத்தில் ஏழு மற்றும் ஐந்து அடியில் அமெரிக்க இராணுவ வீரர்களைப் பரவலாக நிறுத்தும் ஒரு திட்டத்தில் தற்போது உள்ளது.
கடந்த மார்ச் மாதம் தொடக்கம் வழக்கமாக இலங்கைக்கு வருகை தந்துள்ள புளு ரிச்ட் மற்றும் நியூ ஓர்லன்ஸ் என்ற ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கப்பல்களின் வரிசையில் இது இலங்கைக்கு வரும் மூன்றாவது கடற்படைக் கப்பல் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
-06




