செய்திகள்

அமெரிக்காவின் புதிய முதற்குடும்பம்- ஓரு பார்வை

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும் ஓபாமா குடும்பத்தினர் அங்கிருந்து ஹெலிக்கொப்டர் மூலம் வெளியேறி கலிபோர்னியாவிற்கு செல்லவுள்ளனர்.

அதன் பின்னர் புதிய முதற்குடும்பமொன்று ஓபாமா குடும்பத்தினரின் இடத்தை வெள்ளை மாளிகையில் நிரப்பும்.

டிரம்ப் குடும்பத்தினர் தொடர்பான சில குறிப்புகள்

மெலனியா டிரம்ப்( 46)

tru1
டிரம்பின் மனைவி,கிழக்கு ஐரோப்பாவில் ஸ்லோவேனியாவில் பிறந்தவர். மொடலிங் துறையில் சிறப்பாக பிரகாசித்த இவர் 1997 இல் அமெரிக்காவிற்கு சென்றார். இவர் டிரம்பை நியுயோர்க்கில் இடம்பெற்ற ஓரு பசன் நிகழ்ச்சியில் சந்தித்தார். இவர்களுடைய திருமணம் ஜனவரி 22 ம் திகதி இடம்பெற்றது என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

ஓரு முதல்பெண்மணியாக நான் – பாரம்பரியத்தை பின்பற்றும் பெண்ணாக நடந்துகொள்ள விரும்புகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இணையம் மூலம் பெண்களிற்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல்களிற்கு எதிராக போராடப்போவதாக தெரிவித்துள்ள இவர் நிர்வாகத்தில் தலையிடமாட்டார்என்ற கருத்து நிலவுகின்றது.

டொனால்ட் ஜோன் டிரம்ப்-39

tru2
டிரம்பின் மூத்த மகன் ஐந்து பிள்ளைகளின் தந்தையான இவர் முன்னாள் மொடல் என்பதுடன் டிரம்பின் குடும்ப வர்த்தகத்திற்கு தலைமை தாங்கவுள்ளார். இவர் டிரம்ப் நிர்வாகத்திற்கு பங்களிப்பு எதனையும் வழங்கமாட்டார்.

இவன்கா டிரம்ப் -35

tru3
டிரம்பின் மூத்த மகள்- முதல் மனைவிக்கு பிறந்தவர்-இவரும் மொடலிங் பின்னணியை கொண்டவர். யூத மதத்தை சேர்ந்த வர்த்தகர் ஓருவரை திருமணம் செய்து அந்த மதத்திற்கு மாறியவர்- மூன்று பிள்ளைகளின் தாய்.

டிரம்ப் ஸ்தாபனங்களின் நிறைவேற்று அதிகாரியான இவர் சமீபத்தில் திறக்கப்பட்ட டிரம்ப்ஹோட்டல் போன்றவற்றை நிர்வகிக்கின்றார்.

எனினும் தனது கணவர் டிரம்ப் நிர்வாகத்தில் முக்கிய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதால் தான் தனது தந்தையின் ஸ்தாபனங்களில் கவனம் செலுத்தப்போவதில்லை என இவர் தெரிவித்துள்ளார்.

இவரே மறைமுகமாக முதல்பெண்மணியாக செயற்படுவார் என்ற விமர்சனம் எழுந்துள்ளபோதிலும் இவன்கா அதனை நிராகரித்துள்ளார்.