அமெரிக்காவின் ஹவாய் தீவில் பயங்கர தீ: பலர் பலி
அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள மவுயி தீவு நகரமான லஹைனாவின் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த தீவிலிருந்து வெளியேறியுள்ளதுடன் இந்த தீயால் நூற்றுக்கணக்கான கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
லஹைனா நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காட்டுத்தீ பற்றி எரியத் தொடங்கியது.
இதனால் மவுயி தீவில் உள்ள 35,000 க்கும் மேற்பட்ட மக்கள், வீடுகள், வணிக நிறுவனங்கள் ஆபத்தில் உள்ளதாக ஹவாய் அவசரநிலை மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
டோரா சூறாவளியின் பலத்த காற்றால் வேகமாக பரவிய தீப்பிழம்புகள் காரணமாக நூற்றுக்கணக்கான இங்கே மக்கள் கடலில் குதித்து தப்பித்தனர். சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான சுமார் 12,000 மக்கள் வசிக்கும் கடற்கரை நகரமான லஹைனா முழுவதும் தீ ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காட்டுத்தீயால் லஹைனாவில் 270-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், 2,100க்கும் மேற்பட்டோருக்கு அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் அடைக்கலம் வழங்கியுள்ளது.
மவுயி தீவில் தற்பேது காற்றின் வேகம் சற்று குறைந்துள்ளதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இதனால் மவுயி தீவில் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. காட்டுத்தீயை அணைத்து, மீட்புப்பணியை தீவிரப்படுத்துமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.




