செய்திகள்

அமெரிக்காவில் தமிழ் மக்கள் நடத்திய தெருக்கூத்து நிகழ்வு

அமெரிக்காவின் பெண்டன்வில் நகரில் ஐந்தாம் ஆண்டாக தமிழ் மக்களின் ‘மண்வாசனை’ விழா சிறப்பாக அண்மையில் நடைபெற்றது. இதில் தெருக்கூத்து முதல் த்ரோன் லைட் நடனம் என்று பல நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

விழா நடைபெற்ற ரோஜெர்ஸ் உயர் நிலை பள்ளி அரங்கம் முழுவதும் மாவிலை மற்றும் கண்ணைக் கவரும் வண்ண வண்ணத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது .