செய்திகள்
அமெரிக்காவில் பனிப்புயல்: 61 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பனிப்பொழிவுடன் பனிப்புயலும் வீசி வருகிறது. பனிப்புயலால் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டென்னிசி, ஓரிகன் ஆகிய மாகாணங்களில் பனிப்புயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், அமெரிக்காவில் வீசி வரும் பனிப்புயலில் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப்பணிகளள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.(15)




