செய்திகள்
அமெரிக்காவுக்கான ஜனாதிபதியின் பயணம் ரத்து
ஜனாதிபதி அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
சூழல் பாதுகாப்பு தொடர்பான உலகத் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, நான்கு நாள் பயணமாக, 21ஆம் திகதி அமெரிக்கா செல்வதற்கு ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே ஜனாதிபதியின் பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, எனினும், இந்தப் பயணம் கைவிடப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
n10




