செய்திகள்

அமெரிக்க இராணுவ அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோவின் இலங்கை விஜயத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்க இராணுவ அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.டோஹாவிலிருந்து இலங்கை வந்த கட்டார் எயார்லைன்ஸ் விமானத்தில் 16 இராணுவ அதிகாரிகள் இலங்கை வந்துள்ளனர்.அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையிலேயே இவர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும் மேலதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.(15)