செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!

ஜனவரி 20ஆம் திகதியான இன்று டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கிறார்.

நாட்டின் 47 ஆவது ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்பது பாரம்பரியத்திலிருந்து ஆடம்பரமான முறிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பதவியேற்பு நிகழ்வானது 2020 தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை முறியடிக்க முயன்ற கலகக்காரர்களால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கைப்பற்றப்பட்ட கேபிட்டல் கட்டிட வளாகத்தின் திறந்த வெளியில் நடைபெறுவது வழக்கம்.

எனினும், அங்கு நிலவும் கடும் குளிர் நிலவும் என வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டதால், பதவியேற்பு நிகழ்ச்சி கேபிடல் கட்டிடத்தின் ரோட்டுண்டா அரங்கில் நடத்தப்படும்.

பதவியேற்ப்பினை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதியாக தனது இரண்டாவது பதவியேற்புடன் டிரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்புவார்.

அதேநேரம், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.டி.வான்ஸும் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார்.

பதவியேற்பு விழாவைக் காண முதல்முறையாக வெளிநாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலி மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி போன்ற பழமைவாத உலக தலைவர்களை பதவியேற்புக்கு அழைத்துள்ளார்.
-(3)