அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 289.89 ரூபாவாகவும் விற்பனை விலை ரூபா 303.26 ஆகவும் குறைந்துள்ளது.மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட நடுத்தர மாற்று வீதம் 299.11 ரூபாவாகும் அதேவேளை பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ரூபா 362.66 ஆக உயர்ந்திருந்தது.
இதற்கு முந்தை காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்தில் இருந்து மீண்டும் உயர்வை நோக்கி நகர்வதுடன் கடந்த இரு நாட்களில் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் மேலும் அதிகரித்துள்ளது.(15)




