அமெரிக்க பரா ஒலிபம்பிக் போட்டியில் பங்கேற்கும் யாழ் சிவபூமி மாணவர்கள்
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் ஜுன் மாதம் நடைபெறவுள்ள மாற்றுவலுவுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியில் கோண்டாவில் சிவப+மி சிறுவர் மனவிருத்திப் பாடசாலையின் மாணவர்கள் மூவர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இம் மாணவர்களுக்கான பயிற்சிகள் இலங்கையிலுள்ள சர்வதேச தரம் வாய்ந்த மைதானங்களிலும் யாழ்.பல்கலைக்கழக மைதானத்திலும் வழங்கப்பட்டு வருகின்றது.
2011ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் மேற்படி பாடாசலையின் மாணவர் ஒருவர் வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார்.
2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் போட்டியில் மூன்று மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒரு மாணவர் வெண்கலப்பக்கம் பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




