செய்திகள்

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டண அதிகரிப்பு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிப்பு

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணங்களை திருத்தியமைக்க மறுப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அமைச்சரவை செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கட்டணச் சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பொருத்தமான முன்மொழிவு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டதன் பின்னர் இவ்விடயம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன என்று அமைச்சு தெரிவித்துள்ளது. (15)