செய்திகள்
அமைச்சரவை இன்று அவசரமாக கூடுகிறது
அவசரமாக இன்று வெள்ளிக்கிழமை அமைச்சரவை கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சகல அமைச்சர்களுக்கும் இதற்கான அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த அரசாங்கத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் பல தற்போதே வெளி வந்துள்ள நிலையில் அது தொடர்பாக கலந்துரையாடி தீர்மானெமெடுக்க வேண்டுமென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஜனாதிபதிக்கு விடுத்த கோரிக்கையையடுத்தே அமைச்சரவை அவசரமாக கூடவுள்ளது.
இந்த வாரத்திற்கான வழமையான அமைச்சரவை நேற்று முன்தினம் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
n10




