செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள்

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் சில கீழ் வருமாறு
 அகுரேகொட பாதுகாப்பு தலைமையக கட்டிடத் தொகுதியின் நிர்மாணிப்பு வேலைத்திட்டம (ஆலோசனை கம்பனிகள் மற்றும் குறித்த செலுத்துகைகள் தொடர்பில் பரீசீலனை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையை முன்வைத்தல்)
அகுரேகொட பாதுகாப்பு தலைமையக கட்டிடத் தொகுதியின் நிர்மாணிப்பு வேலைத்திட்டம் தொடர்பில் ஆலோசனை சேவையினை இதுவரை காலமும் ஆலோசனை வழங்கி வந்த தனியார் கம்பனியிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கும், குறித்த கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ள செலுத்துகைகள் தொடர்பில் பரீசீலனை மேற்கொள்வதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களிலுள்ள சிறைச்சாலைகளை இடவசதி கூடிய இடங்களுக்கு இடமாற்றுவதற்கான நிகழ்ச்சித்திட்டத்தின் உசாவுகை மற்றும் வடிவமைப்பு நிறுவனங்களைத் தெரிவு செய்தல்
சிறைச்சாலைகளை சீர்த்திருத்த நிலையங்களாக மாற்றியமைக்கும் பொருட்டு சிறைச்சாலைகளில் துரித மறுசீரமைப்பை மேற்கொள்ளும் தேவை அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளது. அதன் கீழ் சனநெரிசல் மிகுந்த பகுதிகளில் காணப்படுகின்ற சிறைச்சாலைகளை மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளுக்கு மாற்றும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. சிறைச்சாலைகளை இடமாற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் சிபார்சின் அடிப்படையில் கொழும்பு, காலி, மாத்தறை, பதுளை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலைகளை இடமாற்றுவதற்கான அடிப்படை வேலைகளை திட்டமிடல் மற்றும் ஆலோசனை சேவையினை வழங்குவதற்காக வேண்டி அரசாங்கத்தின் கீழான நிர்மாணிப்பு நிறுவனங்களிடம் வழங்குவதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர்  டி.எம் சுவாமிநாதனால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அனர்த்த நிவாரண மற்றும் மீள் எழுச்சிக்கான நிதி உதவி
2016 மே மாதத்தில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக நாட்டிலுள்ள பல மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் மண் சரிவினால் மோசமாகப் பாதிக்கப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் உள்நாட்டு கொடை வழங்குனர்களினால் வழங்கப்பட்ட நிதியுதவினை சேமித்து வைக்கும் நோக்கில் 03 வங்கிக் கணக்குகளும், வெளிநாட்டு நிதியுதவிகளை சேமித்து வைக்கும் நோக்கில் 05 வங்கிக் கணக்குகளும் திறக்கப்பட்டன. குறித்த கணக்குகளில் வைப்பிலிடப்பட்ட நிதியினை உரிய முறையில் நிவாரண பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக திறைசேரியின் பிரதி செயலாளரின் பெயரில் இலங்கை மத்திய வங்கியில் திறக்கப்பட்டுள்ள கணக்கிற்கு அன்றாடம் பற்று வைக்கப்படுவதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால்  அமைச்சரவையில் அறிவுறுத்தப்பட்டது.
கொஸ்கம சாலாவ பிரதேசத்தில் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக குவிந்துள்ள வீடுகளின் இடிபாடுகள் மற்றும் குப்பைகளை அகற்றுதல்
2016 ஆம் ஆண்டு மே மாதம் ஏறபட்ட வெள்ள அனர்த்தத்தால் மேல் மாகாணத்தில் பல இடங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகள் மிகவும் வெற்றிகரமான முறையில் அகற்றப்பட்டுள்ளது. குறித்த பணியினை மேற்கொண்டதன் பின்னர் மீதமாகி இருக்கும் நிதியினை கொண்டு இராணுவத்தின் வேண்டுகோளின் பெயரில், கொஸ்கம சாலாவ பிரதேசத்தில் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக குவிந்துள்ள வீடுகளின் இடிபாடுகள் மற்றும் குப்பைகளை அகற்றுவதற்கு 20 டிபர் வாகனங்களை ஒரு வாரத்துக்கு பயன்படுத்த மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர்  பைசர் முஸ்தபாவினால்  முன்வைக்கபட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
n10