அமைச்சரவை நாளை கூடுகின்றது: முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்படும்
அமைச்சரவைக் கூட்டமொன்று நாளை செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள நிலையில் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயம் காரணமாக வழமையாக நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் கடந்த வாரம் நடைபெறவில்லை. இந்த நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க வேண்டியது கட்டாயம் என ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார். முக்கியமான பல விடயங்கள் நாளைய கூட்டத்தில் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
R-06




