செய்திகள்

அமைச்சர்களுக்கு அடிக்கல் நாட்டுவதே சிந்தனையாக இருக்கின்றது! மே தின நிகழ்வில் ஆறுமுகன் பேச்சு

இலங்கை தொழிலாளா் காங்கிரஸின் மே தின பேரணியும் மே தின கூட்டமும் தலவாக்கலை நகரில் இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளா் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம் மற்றும் இலங்கை தொழிலாளா் காங்கிரஸின் பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் செந்தில் தொண்டமான், கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் இலங்கை தொழிலாளா் காங்கிரஸின் பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் கலந்து கொண்டு உரையாற்றுகையில்,

கடந்த தேர்தலின் போது ஜனாதிபதியை மாற்ற வேண்டும் என நினைத்து வாக்களித்தீர்கள். யாரும் நினைத்து பார்க்கவில்லை அரசாங்கம் மாறிய போது அமைச்சா்கள் மாறினார்கள். ஆனால் இன்று பாராளுமன்றம் எதிர்கட்சி பலமாக உள்ளது. எதிர்கட்சியில் 148 பேர் இருப்பதோடு ஆளுங்கட்சியில் 46 பேர் மாத்திரமே இருக்கின்றார்கள். 19 வது அரசியல் சட்டத்தை நிறைவேற்றும் பொழுது ஆளுங்கட்சியில் உள்ளவா்களும் எதிர்க்கட்சியில் உள்ளவா்களும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும் என கூறப்பட்டது.

இதில் 10 பேர் எதிர்கட்சியில் சார்ந்தவர்களாக இணைந்து கொள்ள வேண்டும் என கூறிய போதும் அதனை ஆளுங்கட்சி மறுப்பு தெரிவித்தது. இதனால் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு வைக்கமாறு கூறியதால் உடனடியாக இதனை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. இன்று தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா பெற்றுக்கொடுக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூறியிருந்தாலும் இதனை பெற்றுக் கொடுக்காவிட்டால் மாற்று கட்சிகள் வீதியில் இறங்கி போராட்டம் செய்வதாக தம்பட்டம் அடிக்கின்றார்கள்.

இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் ஒரு போதும் துரோகம் விளைவித்தது இல்லை. இன்று பாராளுமன்றத்தில் இருக்கின்ற அமைச்சா்கள் அடிக்கல் நாட்டுவதே அவர்களுடைய சிந்தனையாகவே இருக்கின்றது. அவா்கள் அடிக்கல்லை நாட்டினாலும் மலையக மக்களுக்கு சேவை செய்ய கூடிய கட்சியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாத்திரமே செயல்ப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இந்த மே தின விழாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தா்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியது குறிப்பிடதக்கது.

vlcsnap-2015-05-01-15h44m49s14