செய்திகள்

அமைச்சர் மனோ கணேசன் திடீர் சுகவீனம்: அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் திடீர் சுகவீனமடைந்த நிலையில் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டார்.

உயர் இரத்த அழுத்தம் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் தனியார் மருத்துவமனை ஒன்றின் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டதயடுத்து  இன்று மாலை அவரது நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

முழுமையான ஓய்விலிருக்குமாறு  மருத்துவர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியதையடுத்து, அடுத்த சில தினங்களுக்கு அவர் பங்குகொள்ளவிருந்த நிகழ்வுகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஒரு சில தினங்களுக்கு அவர் மருத்துவமனையிலேயே இருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
R-06