அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு : சீ.ஐ.டி விசாரணை ஆரம்பம்
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரில் போலி பேஸ்புக் கணக்கை நடத்திச் சென்ற இளைஞனொருவனை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் நடவடிக்கையெடுத்துள்ளது.
பெல்மடுல்ல பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு போலி பேஸ்புக் கணக்கை நடத்திச் சென்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Ravi Karunanayake Lanka Intelligence என்ற பெயரில் ரவிகருணாநாயக்கவின் உத்தியோகபூர்வ பக்கம் போல் இது நடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் இதில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையிலான பொய் தகவல்கள் வெளியிட்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)




