செய்திகள்

அமோக வரவேற்பை பெறும் ‘சென்னை 28 – II’ படத்தின் டீசர்

வெங்கட் பிரபு – யுவன்ஷங்கர் ராஜா கூட்டணிக்கு எப்போதுமே தமிழக ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்தி இருக்கின்றது இந்த ‘சென்னை 28 – II’
படத்தின் ‘The Boys are back’ ஒரு நிமிட பாடலின் டீசரானது ‘யூடூப்பில்’ இரண்டரை லட்சம் பார்வையாளர்களை எட்டியுள்ள நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டு வருகிறது.
‘வரோம் சொல்லு, தள்ளி நில்லு, மச்சி இது நம்ம பிச்சு கிழிச்சிடலாம்…’ என்ற வரிகளில் ஆரம்பமாகும் ‘ The Boys are back’ பாடலின் டீசரானது, ‘சென்னை 28′ படத்தின் கிரிக்கெட் களத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.
ஹிப் – ஹொப் பாணியில் உருவாகியிருக்கும் இந்த பாடலை யுவன்ஷங்கர் ராஜா பாடியிருப்பது மேலும் சிறப்பு. இது குறித்த கருத்து தெரிவித்த இசைத்தளத்தின் நிறுவனர் கௌந்தேயா கூறுகையில்,
‘ The Boys are back’ பாடலின் டீசர் மூலம் தரமான சிக்ஸரை வெங்கட் பிரபு அடித்து இருக்கிறார் என்பதை உறுதியாக சொல்லலாம்.
‘சென்னை 28 – II’ படத்தின் ஓடியோ பார்ட்னராக செயல்படுவது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. ரசிகர்களிடம் இந்த டீசர் அமோக வரவேற்பை பெற்று வருவதை பார்க்கும் பொழுது அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது’ என்று கூறுகிறார்.

N5