செய்திகள்
அம்பலாங்கொடையின் துப்பாக்கி சூடு : 4 வயது பிள்ளை உட்பட மூவர் பலி
அம்பலாங்கொடை பகுதியில் நேற்று இரவு இனந்தெரியாத குழுவின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
அம்பலங்கொடை , இடம்தொட்ட பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் , மனைவி மற்றும் பிள்ளை ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர்.
தந்தையின் வயது 35 எனவும், தாய் 27 வயதானவர் எனவும், அவர்களின் பிள்ளையின் வயது 4 எனவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)




