அம்பாந்தோட்டையில் பதற்றம் : அரசாங்க ஆதரவாளர்களும் மகிந்த அணியினரும் மோதல்
தெற்கு அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது அங்கு கடும் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று காலை நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதன்போது இருதரப்பினருக்கிடையே மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிகழ்வுக்கு வந்தவர்களுக்கும் அந்த வேலைத்திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுத்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.இதில் பலர் காயமடைந்துள்ளனர். இதன்போது அவ்விடத்திற்கு சென்ற கலகம் அடக்கும் பொலிஸார் நிலமையை கட்டுப்படுத்தி ஆர்ப்பாட்டங்காரர்களை விரட்டியடித்துள்ளனர்.
எவ்வாறாயினும் அங்கு தொடர்ந்தும் பதற்றமான நிலைமை நீடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)





