செய்திகள்

அம்பாந்தோட்டையில் மோதல் நிலைமையை ஏற்படுத்தி உயிர்கள் பலியெடுக்க சதி! புலனாய்வு தகவல்

அம்பாந்தோட்டை பகுதியில் பெரும் மோதல் நிலைமைகளை ஏற்படுத்தி மனித உயிர்களை பலி கொடுக்கும் சதித்திதிட்டமொன்று தீட்டப்பட்டு வருவதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டிருக்கும் கைத்தொழில் நகரம் மற்றும் துறைமுக அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களை அடிப்படையாக கொண்டே இந்த சதித் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிக்குகள் மற்றும் மக்களை வீதியில் இறக்கி இராணுவம் மற்றும் பொலிஸாரை கொண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்த வைப்பதே சிலரது தேவையாக இருப்பதாகவும் இதன்போது பாரிய மேதல் நிலைமைகள் ஏற்படவாய்ப்பு உள்ளதாகவும் புலனாய்வு தகவல்களை ஆதாரம் காட்டி அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி இந்த தகவலை அமைச்சர் வெளியிட்டுள்ளார். -(3)