செய்திகள்

அம்மன் தோற்றத்தில் நயன்தாரா – வைரலாகும் புகைப்படம்

நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக நயன்தாரா, 48 நாட்கள் விரதம் இருந்து நடித்துள்ளார். அவருடன் ஊர்வசி, மவுலி, இந்துஜா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.202003011335570667_1_nay41a._L_styvpf

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அம்மன் தோற்றத்தில் இருக்கும் நயன்தாராவின் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. (15)