செய்திகள்

அரசாங்கத்தினால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் : மஹிந்த ராஜபக்‌ஷ

தற்போதைய அரசாங்கத்தினால் மக்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
கல்கமுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டு மக்கள் பல துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு மானியங்களை வழங்குவதாக தெரிவித்து தற்போது வரிச் சுமைகளை அதிகரித்துள்ளனர். பல்வேறு எதிர்பார்ப்புகளுடனேயே மக்கள் புதிய அரசாங்கத்திற்காக வாக்களித்தனர் ஆனால் அவர்கள் அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை விவசாயம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளில் தனது அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ளன விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்தான் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்றார். ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. மக்கள் யாரிடம் குறைகளை கூறுவது என்ற பிரச்சினை எழுந்துள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.
R-06