அரசாங்கத்தின கதவு மூடப்பட்டுவிட்டது : இனி யாருக்கும் உள்ளே வர முடியாது என்கிறார் பிரதமர்
தேசிய அரசாங்கத்தின் கதவுகள் மூடப்பட்டுவிட்டதாகவும் இனி வெளியார் யாருக்கும் அரசாங்கத்திற்குள் நுழைய முடியாது எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
வெலிமட பகுதியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேசிய அரசாங்கத்திற்குள் இனி வெளியார் யாருக்கும் நுழைய முடியாது. அவ்வாறு யாரும் நுழையவும் தேவையில்லை. மைத்திரிபால சிறிசேனவுடன் வந்த குழுவும் மற்றும் தேசிய அரசாங்கத்திற்காக வந்த குழுவும் போதுமானது. இதன்படி அரசாங்கத்தின் சலூன் கதவு மூடப்பட்டு விட்டது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)




