செய்திகள்

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் பொறுப்பு சிவில் சமூகத்துக்கு உள்ளது : நல்லிணக்க பொறிமுறை குழு

நாட்டில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் பாரதூரமான மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் நீதிபதிகள் குழாமில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ள நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனை செயலணி, தாம் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படாவிட்டாலுமே கூட, அவற்றை அமுல்படுத்த அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் பொறுப்பும் கடப்பாடும் சிவில் சமூகத்துக்கு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனை செயலணியின் இறுதி அறிக்கை அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோரின் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதில் குறிப்பிடப்பட்டிருந்த சர்வதேச நீதிபதிகளின் அவசியம் தொடர்பான பரிந்துரையை நிராகரித்த அமைச்சரவை இணைப் பேச்சாளரான சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன மேற்படி பரிந்துரையை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் கிடையாது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்த செய்துள்ள நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைசெயலணி செயலா ளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தாம் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படாவிட்டாலுமே கூட, அவற்றை அமுல்படுத்த அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் பொறுப்பும் கடப்பாடும் சிவில் சமூகத்துக்கு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். -(3)