செய்திகள்
அரசாங்கத்திற்கு எதிராக மஹிந்த அணியினர் இன்று பேரணி
அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இன்று கொழும்பில் ஆரப்பாட்ட பேரணியொன்றையும் பொதுக் கூட்டமொன்றையும் நடத்தவுள்ளனர்.
இன்று மாலை கொழும்பு 10இல் அமைந்துள்ள ஹைட்பார்க் மைதானத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துக்கொள்ளவுள்ளார்.
இதேவேளை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் உள்ளிட்ட 40ற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
n10




