செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக 17ஆம் திகதி கொழும்பில் பாரிய கூட்டமொன்றை நடத்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானம்

அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாளை மறுதினம் வியாழக்கிழமை கொழும்பில் எதிர்ப்பு கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
இந்த கூட்டத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவுள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அவரும் இதில் கலந்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு ஹைட்பார்க் மைதானத்திலேயே இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திர்க்கட்சி உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொள்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
n10