செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக நகர்வுகளை முன்னெடுக்க தயராகும் ஹெல உறுமய

அரசாங்கத்தின் அவசரத் தேவைகளுக்காக அரசியல் அமைப்பை உருவாக்க முடியாது. நன்றாக ஆராய்ந்தே அது தயாரிக்கப்பட வேண்டும். அவ்வாறு ஆராயாது உடனடியாக அரசியல் அமைப்பு கொண்டு வரப்படுமாயின் அதை எதிர்ப்போம் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலிசம்பிக்க ரணவக்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அவ்வாறு ஏதேனும் தீர்மானங்கள் எடுக்குமாயின் நாமும் அரசாங்கத்துக்கு எதிரான நகர்வுகளை மேற்கொள்ளவேண்டி வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்-(3)