செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாளை முதல் ஆரம்பம் : ஜே.வி.பி

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக நாளை 4ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் போராட்டங்ளை முன்னெடுப்பதற்கு ஜே.வி.பி தீர்மானித்துள்ளது.
இதன்படி நாளை கொழும்பில் மக்களை தெளிவுபடுத்தி துண்டுபிரசுர விநியோகத்துடன் தனது போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ள ஜே.வி.பி 5ஆம் திகதி அம்பாந்தோட்டை நகரிலும் , 17ஆம் திகதி கொழும்பிலும் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. அத்துடன் தமது தொழிற்சங்களை இணைத்து நாளாந்தம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. -(3)