செய்திகள்

அரசாங்கத்திற்கு சாபம் விடுத்து மகிந்த அணியினர் தேங்காய் உடைப்பு போராட்டத்தில்

அரசாங்கத்திற்கு சாபம் விடுத்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் மீண்டும் ஆலயங்களில் தேங்காய் உடைக்கும் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
ஹிக்கடுவ சீனிகம மகா விஷ்ணு ஆலயம், சிலாபம் – முன்னேஸ்வரம் கோயில் மற்றும் நவகமுவ பத்தினியம்மன் ஆலயம் என்பவற்றில் இன்று முதல் தேங்காய் உடைக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
புதிய அரசியலமைப்பு மற்றும் மக்கள் மீதான வரி என்பவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. -(3)