செய்திகள்
அரசாங்கத்திற்கு தும்புத்தடியை காட்டும் மகிந்தவின் மகளிர் அணி
அரசாங்கத்தை தும்புத்தடியால் அடித்து விரட்ட வேணடும் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மகளிர் அணி தெரிவித்துள்ளது.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பியகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் நிமல்கா கொந்தேவேலவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிராமங்களில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியினர் கூட தொழில் வாய்ப்பின்றி இருந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில், எப்படி 10 இலட்சம் தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும் எனவும் நிமல்கா இதன்போது கேள்வியெழுப்பிய அவர் மக்களுக்குக வாழ்க்கைச் சுமையை அதிகரித்த அரசாங்கத்தை தும்புத்தடியால் அடித்து விரட்ட வேண்டுமென தான் கொண்டு வந்த தும்புத்தடியை உயர்த்திக் காட்டியே அவர் தனது கருத்துக்களை முன்வைத்தார்.
n10




