செய்திகள்
அரசாங்கத்திலிருந்து 28 பேரை தங்களுடன் இணைக்க மகிந்த அணி முயற்சி
புதிய அரசியலமைப்பு மீதான வாக்கெடுப்பின் போது அரசாங்கத்தை சேர்ந்த 28ற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பக்கம் வருவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பை தோற்கடிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாகவும் அதேபோன்று அரசாங்கத்திலும் பலர் அதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் இதன்படி அவர்கள் தங்களுடன் இணைந்து அதனை தோற்கடிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)




