செய்திகள்

”அரசாங்கம் இலங்கையின் இறையாண்மையை இந்தியாவிடம் காட்டிக்கொடுத்துள்ளது”

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையின் இறையாண்மையை இந்தியாவிடம் காட்டிக்கொடுத்துள்ளதாக ஐ.நாவுக்கான முன்னாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தயான் ஜெயதிலக கூறுகிறார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனமையிக் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது செய்துகொள்ளபட்ட ஒப்பந்தங்கள் குறித்து இணையத்தள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
குறித்த உடன்படிக்கைகளில் பல விடயங்கள் இந்தியாவுக்கு இலங்கையின் இறையாண்மையை காட்டிக்கொடுக்கும் வகையிலானவை என்றும், ஆனால்
அந்த உடன்படிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்கவால் செய்துகொள்ள திட்டமிடப்பட்ட மற்றும் ஜேவிபியின் எதிர்ப்பு வெளியிட்ட உடன்படிக்கைகள் இம்முறை செய்துகொல்லப்பட்டவற்றில் உள்ளன என்றும், இவற்றால் இலங்கையின் இறையாண்மை கடுமையாக சவாலுக்கு உட்படுத்தபடுள்ளது தயான் ஜெயதிலக கூறுயுள்ளார்.
இதேவேளை, இந்தியப் பிரதமரின் தலைமையில் செயல்படுத்தப்படும் அகண்ட பாரத் திட்டத்தில் இலங்கையும் இணைந்துள்ளதாகவும், குறித்த உடன்படிக்கைகள் மூலம், நாட்டில் இந்திய கனரக ஆயுதத் தொழிற்சாலைகள், களஞ்சியங்கள் மற்றும் இராணுவ வீரர்களை நிறுவுவதற்கான திட்டங்கள் உள்ளன என்றும் அவர் இந்த நேர்காணலில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
-(3)