செய்திகள்

அரசாங்கம் திட்டமிட்டு இனவாதத்தை பரப்புகிறது : மகிந்த குற்றச்சாட்டு

நாட்டில் இனவாதத்தை தூண்டி அபிவிருத்தி நடவடிக்கைகளை மறக்கடிக்கும் செயற்பாடுகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படாத நிலையில் வடக்கு முதல்வர் இனவாதத்தை தூண்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாத்தறை வெலிகம பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)