செய்திகள்

அரசாங்க அதிபர் சதி செய்துள்ளார்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

வவுனியா மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபரும் தற்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராகவும் உள்ள திருமதி சாள்ஸ் சதி செய்துள்ளார் என வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான றிசாட் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் கடந்த திங்கள் கிழமை இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிததார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் நிறுவப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் விவாதம் இடம்பெற்ற போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்ன மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைப்பதற்கு என 2010 ஆம் ஆண்டு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு ஓமந்தையில் 20 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் நீங்களும் (றிசாட்), முன்னாள் ஆளுனர் சந்திரசிறி அவர்களமு; இணைத்தலைவர்களாக இருந்தீர்கள். அந்த தீர்மானத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். அதில் மக்கள் பிரதிநிதிகள் உட்பட 83 பேர் பங்குபற்றியிருக்கழறோம் எனக் கூறி அதன் பிரதியை காட்டினார்.

இதன்போது பதில் அளித்த அமைச்சர் றிசாட், இது எனக்கு தெரியாது. இந்த துpர்மானம் நான் எடுக்கவில்லை. முன்னாள் அரச அதிபர் இதில் சதி செய்துள்ளார். அவர் வேண்டுமென்றே ஓமந்தையைப் போட்டுள்ளார். இதைப் பற்றி எனக்கு தெரியாது. அரச அதிபருக்கு ஓமந்தையில் காணி இருப்பதால் அவர் சதி செய்திருக்கிறார் எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

இதேவேளை, குறித்த 2010 ஆம் ஆண்டு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நுனைஸ் பாறுக், முன்னாள் நகரசபைத் தலைவரும்தற்போதைய வடமாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

N5