அரசாள்படுகொலைகளும் (Policide), இராஜ்ஜியபடுகொலைகளும் (Democide), வலிவடக்கு ஓர் ஆதாரம்
மருத்துவர் சி. யமுனாநந்தா
வலிவடக்கில் சிங்கள இராணுவத்தின் ஏகாதிபத்திய அடக்குமுறை தொடர்ந்த வண்ணமே உள்ளது. தமிழ் மக்களின் காணிகளை அவர்கள் பலாத்காரமாக சுவீகரித்து அனுபவித்துக் கொண்டு உள்ளனர். தல் செவன ஹொட்டல், ஜனாதிபதி மாளிகை உட்பட பல ஆடம்பர இடங்கள் தமிழ் பிரதேசம் மீதான ஏகாதிபத்தியத்தின் ஆதாரங்களாக உள்ளன.
இவற்றிற்கு மேலாக அண்மையில் இலங்கை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை, யாழ்ப்பாண பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது. ஆனால் அங்கு வைத்தியசாலைக் கட்டங்கள் தரைமட்டமாக்கப்பட்டு அந்நிலத்தில் இராணுவத்தினர் உல்லாசவிடுதி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு பெயர் Tanker’s Rest அதாவது தமிழ் பிரதேசங்களைத் தரைமட்டமாக்கிய படைப்பிரிவின் உல்லாசவிடுதி. ஒரு வைத்திசாலையினை இடித்து உல்லாசவிடுதியாக மாற்றிய தார்ப்பரியம் எத்தகையது என்ற வினா ஒவ்வொரு தமிழ்மக்களிடமும் எழவேண்டியது.

அடுத்ததாக அந்த உல்லாசவிடுதியில் 10 இற்கு அதிகமான அம்மிக்கற்களும், 10இற்கு அதிகமான ஆட்டுக்குழல்களும் அழகு பொருட்களாக உள்ளன. இவை 20இற்கு மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டதற்கான ஆதாரம். 20இற்கு மேற்பட்ட குடும்பங்கள் அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள்.
அரசினால் அடக்குமுறைகளுக்கு கீழ் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு இராஜ்ஜியப்படுகொலைகள் (Democide) என்ற வரைவிலக்கணம் நவீன மனித உரிமைத் தத்துவத்தில் உள்ளது. தமிழ்மக்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட இராஜ்ஜியப்படுகொலைகளுக்கு ஓர் ஆதாரமாகமே மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை அமைந்துள்ளது.
மேலும் சிங்கள இனவாதிகள் தமது அரசியல் மேலாதிக்கத்திற்காக தமிழ்மக்களைக் கொன்றொழித்தனர். இது அரசாள்படுகொலைகளுக்கும் (Policide) இராஜ்ஜியப்படுகொலைகளுக்கும் (Democide) அரச நிர்வாக இயந்திரமும், சர்வதேசமும் துணைபோகும். இதற்கான நீதியினை உள்நாட்டிலோ சர்வதேசத்திடமோ பெற முடியாது. இவற்றினை எதிர்கொள்வதிலேயே ஈழத்தமிழரின் எதிர்காலம் தங்கியுள்ளது.



