செய்திகள்
அரசியலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது!
ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சக திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையின் (ஆ) பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள “ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட” எனும் சொல்லுக்கு மாற்றாக “ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட” எனும் சொல்லை பதிலீடு செய்து அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்திற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
-(3)




